×

வேலாயுதம்பாளையம் பகுதியில் கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற இருவர் மீது வழக்கு

வேலாயுதம்பாளையம்,செப்.5: கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம் பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பான் மசாலா, குட்கா, ஹான்ஸ், பான்பராக் மற்றும் பல்வேறு வகையான புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் எஸ்ஐ ரமேஷ் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட மளிகை கடைக்கு சென்று மளிகை கடையில் சோதனை செய்தனர். அப்போது அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பான் மசாலா, குட்கா உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்பனை செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்து கடை உரிமையாளர் கவுரி(45) என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதேபோல் வேலாயுதம்பாளையம் மலைவீதி ரவுண்டானா பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் எஸ்ஐ நந்தகோபால் தலைமையிலான போலீசார்ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு இருந்த பான் மசாலா, குட்கா, புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்து விற்பனை செய்த அசோக்ராஜ் (48) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வேலாயுதம்பாளையம் பகுதியில் கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற இருவர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Velayuthampalayam ,Tamil Nadu government ,Punnam Chatram ,Karur district ,
× RELATED நொய்யல் அருகே பெட்டிக்கடையில் புகையிலை பொருள் விற்ற பெண் மீது வழக்கு